தனியுரிமைக் கொள்கை
தளங்கள் (இனி குறிக்கப்படுவது), நிறுவனங்கள் சட்டம் 2013-இன் கீழ் நிறுவப்பட்ட, அலுவலகம்-2, மாடி 4, விங் B, பிளாக் A, சலர்பூரியா சாஃப்ட்ஸோன் சர்வீஸ் ரோடு, கிரீன் கிளென் லேஅவுட், பெல்லந்தூர், பெங்களூரு தெற்கு பெங்களூரு கர்நாடகா – 560103 இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட Indus Appstore பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. https://www.indusappstore.com/ (“Indus இணையதளம்”) Indus Appstore – டெவலப்பர் பிளாட்ஃபார்ம் (“டெவலப்பர் பிளாட்ஃபார்ம்”) Indus Appstore மொபைல் செயலி மற்றும் பிற தொடர்புடைய சேவைகள் (கூட்டாக “தளங்கள்” என்று குறிப்பிடப்படுகிறது) மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை சேகரித்தல், சேமித்தல், பயன்படுத்துதல் மற்றும் செயலாக்குதல் ஆகியவற்றை இந்தக் கொள்கை விவரிக்கிறது. தளங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், Indus வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும், உங்கள் தகவல் வழங்குவதன் மூலமும் அல்லது எங்கள் தயாரிப்பு/சேவைகளைப் பெறுவதன் மூலமும், இந்த தனியுரிமைக் கொள்கை (“கொள்கை”) மற்றும் பொருந்தக்கூடிய சேவை/தயாரிப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாக நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும், உங்கள் தனியுரிமையையும் நாங்கள் மதிக்கிறோம், பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கான மிக உயர் தரங்களைப் பராமரிக்கிறோம் மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கிறோம். இந்தத் தனியுரிமைக் கொள்கை வெளியிடப்பட்டு, இந்திய சட்டங்களின் விதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் கீழ் தகவல் தொழில்நுட்ப (நியாயமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் உணர்வுபூர்வமான தனிப்பட்ட தரவு அல்லது தகவல்) விதிகள், 2011 உள்ளிட்ட விதிமுறைகளின்படி பொருள் கொள்ளப்படும். தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல், பயன்படுத்துதல், சேமித்தல், பரிமாற்றம் செய்தல், வெளிப்படுத்துதல் ஆகியவற்றுக்கான தனியுரிமைக் கொள்கையை வெளியிடுவது இதற்குக் கட்டாயமாகும். தனிப்பட்ட தகவல்கள் என்பது குறிப்பிட்ட தனிநபரின் தொடர்புடைய அனைத்து தகவல்களும் மற்றும் அவரின் உணர்வுபூர்வமான தகவல்களும் உள்ளடங்கும். (அனைத்து தனிப்பட்ட தகவல்களும் அதன் உணர்வுபூர்வமான மற்றும் தனிப்பட்ட காரணங்களால் உயர்தர தரவு பாதுகாப்பு தேவைப்படுகிறது) பொது டொமைனில் அணுகக்கூடிய அல்லது இலவசமாகக் கிடைக்கக்கூடிய தகவல்கள் தவிர்த்து, இவை இனி “தனிப்பட்ட தகவல்கள்” என்று குறிக்கப்படும். இந்த தனியுரிமைக் கொள்கையில் நீங்கள் உடன்படவில்லை எனில், எங்கள் தளங்களைப் பயன்படுத்தவோ அல்லது அணுகவோ வேண்டாம்.
- தகவல் சேகரிப்பு
எங்கள் சேவைகள் அல்லது தளங்களைப் பயன்படுத்தும்போது அல்லது நமது உரையாடலில் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம். நீங்கள் கோரிய சேவைகளை வழங்குவதற்கும், தளங்களை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் பொருத்தமான மற்றும் முற்றிலும் அவசியமான தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் உணர்வுபூர்வமான தனிப்பட்ட தகவல்கள் மட்டுமல்லாமல் மற்றவையும் சேகரிக்கப்படும்:
a. உங்கள் விளம்பர ID போன்ற உங்கள் செயல்பாட்டுத் தகவல் மற்றும் எங்கள் தளங்களை அணுகும்போது சில வகையான தகவல்கள் அல்லது விளம்பரங்கள் மற்றும் பிற தளங்களில் Indus சார்பாக வழங்கப்படும் பிற உள்ளடக்கம். நாங்கள் கூட்டாக சேவைகளை வழங்கும்போது ஒரு பார்ட்னரிடமிருந்து வரும் தகவல் போன்ற, உங்களைப் பற்றியும் உங்க ள் செயல்பாடுகள் பற்றியும் மூன்றாம் தரப்பு பார்ட்னர்களிடமிருந்து தகவல்களைப் பெறுகிறோம்.
b. உங்கள் மொபைல் எண் மற்றும் சாதன விவரங்கள், அதாவது சாதன அடையாளங்காட்டி, சாதன மொழி, சாதனத் தகவல், இணைய அலைவரிசை, மொபைல் சாதன மாதிரி மற்றும் செலவழித்த நேரம், IP முகவரி மற்றும் இருப்பிடம், இணைப்புத் தகவல் போன்றவை.
நீங்கள் ஒரு டெவலப்பராக இருந்தால், டெவலப்பர் தளத்தில் பதிவுசெய்தல் மற்றும் சரிபார்த்தலுக்காக உங்கள் பெயர், மின்னஞ்சல், முழுமையான முகவரி, PAN விவரங்கள், வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட விவரங்களை நாங்கள் கூடுதலாக சேகரிப்போம். நீங்கள் பல்வேறு படிகளில் தளங்களைப் பயன்படுத்தும் தகவல்களைச் சேகரிக்கலாம். அவை:
a. தளங்களுக்குச் செல்லுதல்
b. தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளால் நிர்வகிக்கப்படும் வேறு எந்த உறவும் அல்லது “பயனராக” பதிவுசெய்தல், டெவலெப்பர் தளத்தில் கணக்கைச் சரிபார்த்தல்
c. தளங்களில் பரிவர்ததனை செய்தல் அல்லது பரிவர்த்தனை செய்ய முயலுதல்
d. இணைப்புகள், மின்னஞ்சல்கள், அரட்டை உரையாடல்கள், கருத்துகள், தளங்களால் அனுப்பப்பட்ட அல்லது சொந்தமான அறிவிப்புகளை அணுகுதல் மற்றும் நாங்கள் அவ்வப்போது எடுக்கும் கணக்கெடுப்புகளில் பங்கேற்க நீங்கள் தேர்வுசெய்தல்
e. மற்றபடி Indus இணை நிறுவனங்கள்/நிறுவனங்கள்/துணை நிறுவனங்கள்/அசோசியேட்ஸ் ஆகியோரை கையாளுதல்
- தகவலின் நோக்கம் மற்றும் பயன்பாடு
கீழக்கண்ட காரணங்களுக்காக Indus உங்கள் தனிப்பட்ட தகவல்களை செயலாக்கலாம்:
a. உங்கள் கணக்கை உருவாக்குதல், உஙகள் அடையாளத்தைச் சரிபார்ததல் மற்றும் சிறப்புரிமைகளை அணுகுதல்
b. நாங்கள், துணை நிறுவனங்கள், இணை நிறுவனங்கள், பார்டனர்கள் அல்லது வணிக பார்ட்னர்களால் வழங்கப ்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை உங்களுக்கு வழங்குதல்.
c. உங்கள் கேள்விகள், பரிவர்த்தனைகள் மற்றும் அல்லது வேறு ஏதேனும் தேவைகள் மற்றும் பிறவற்றுக்கு
d. நீங்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால் அவற்றைத் தீர்க்க தகவல்தொடர்பு தகவல்களை பகுப்பாய்வுசெய்தல் உதாரணமாக, கடைசியாக பதிவேற்றியது/உரையாடல்/மேற்கொள்ளப்பட்ட செயல்பாடு, எங்கள் சேவைகளை நங்கள் கடைசியாக பயன்படுத்தியது மற்றும் பிற இதுபோன்ற செயல்பாடுகள்.
e. ஒருங்கிணைந்த அடிப்படையில் பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பல்வேறு செயல்முறைகள்/விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது/தயாரிப்பு/சேவை சலுகைகளைப் பெறுவதில் உங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்துதல்
f. பகுப்பாய்வு சேவையை வழங்குதல், தளங்களில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த உதவுதல்.
g. அவ்வப்போது தயாரிப்புகள்/சேவைகளை கண்காணித்தல், மதிப்பாய்வு செய்தல்; உங்கள் அனுபவத்தை பாதுகாப்பாகவும் எளிதாகவும் மாற்ற சேவைகளைத் தனிப்பயனாக்கல், மற்றும் தணிக்கை நடத்துதல்
h. தளங்கள் அல்லது மூன்றாம் தரப்பு இணைப்புகள் மூலம் உங்களால் பெறப்பட்ட/கோரப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்காக மூன்றாம் தரப்பினர் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதித்தல்.
i. பிழை, மோசடி, பணமோசடி மற்றும் பிற குற்றச் செயல்களிலிருந்து எங்களைக் கண்டறிந்து பாதுகாக்க; சந்தை ஆராய்ச்சி நோக்கங்களுக்காக உங்களைத் தொடர்பு கொள்ள எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அமல்படுத்துதல்; ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சலுகைகள், தயாரிப்புகள், சேவைகள் மற்றும் புதுப்பிப்புகள் பற்றி உங்களுக்குத் தெரிவித்தல்; சந்தைப்படுத்துதல், விளம்பரங்களை வழங்குதல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சலுகைகளை வழங்குவதன் மூலம் உங்கள் அ னுபவத்தைத் தனிப்பயனாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்.
j. உங்கள் பயனர் அனுபவத்தையும் எங்கள் சேவைகளின் ஒட்டுமொத்த தரத்தையும் மேம்படுத்த குக்கீகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துதல்.
k. ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை நடத்துதல், உருவாக்கியவற்றில் உள்ள அம்சங்களைச் சோதித்தல் மற்றும் தகவல்களை பகுப்பாய்வு செய்தல் நாங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மதிப்பீடு செய்து மேம்படுத்த வேண்டும், புதிய தயாரிப்புகள் மற்றும் அம்சங்களை உருவாக்க வேண்டும், மேலும் தணிக்கை மற்றும் சரிசெய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
l. எங்கள் விளம்பரம் மற்றும் அளவீட்டு முறைகளை மேமபடுத்துவதன் மூலம் உங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களைக் காட்டலாம், அத்துடன் விளம்பரங்கள் மற்றும் சேவைகளின் செயல்திறனை அளவிடலாம்
m. எங்கள் சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை பகுப்பாய்வு செய்வதற்கும், விளம்பரங்கள் மற்றும் சேவைகளின் செயல்திறனை அளவிடுவதற்கும், வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கும் எங்கள் வணிகத்தை ஆதரிக்கும் விற்பனையாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் பிற பார்ட்னர்களுக்கு விளம்பர ID போன்ற தகவல்களைப் பகிருங்கள்.
n. முரண்பாடுகளைத் தீர்க்க, சிக்கல்களை சரிசெய்ய, தொழில்நுட்ப உதவி மற்றும் பிழைகளை சரிசெய்ய, பாதுகாப்பான சேவையை ஊக்குவிக்க உதவுங்கள்
o. பாதுகாப்பு மீறல்கள் மற்றும் தாக்குதல்களைக் கண்டறிதல், கணக்குகள் மற்றும் செயல்பாடுகளைச் சரிபார்த்தல், மேலும் எங்கள் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புறுதியை மேம்படுத்துதல், சந்தேகத்திற்கிடமான செயல்பாடு அல்லது எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கைகளை மீறுவதை விசாரித்தல், சட்டவிரோத அல்லது சந்தேகிக்கப்ப டும் மோசடி அல்லது பணமோசடி நடவடிக்கைகளை விசாரித்தல், தடுத்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல் மற்றும் இந்தியாவிற்குள் அல்லது இந்திய அதிகார வரம்பிற்கு வெளியே அமைந்துள்ள Indus அல்லது அரசு நிறுவனங்களால் உள் அல்லது வெளிப்புற தணிக்கை அல்லது விசாரணையின் ஒரு பகுதியாக தடயவியல் தணிக்கைகளை நடத்துதல் போன்றவை.
p. சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்ற, பிற சட்டபூர்வமான பிஸ்னஸ் சூழ்நிலைகளுக்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் செயலாக்கக்கூடும் என்றாலும், இந்தச் செயலாக்கத்தை முடிந்தவரை குறைக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதிசெய்கிறோம், இது உங்கள் தனியுரிமையில் குறைவான ஊடுருவலை ஏற்படுத்தும்.
- குக்கீகள் அல்லது ஒரே போன்ற தொழில்நுட்பங்கள்
எங்கள் வலைப்பக்க செயலாக்கத்தைப் பகுப்பாய்வு செய்யவும், விளம்பர செயல்திறனை அளவிடவும், எங்கள் டெவலப்பர் தளத்தின் பயன்பாட்டைப் புரிந்துகொள்ளவும், அத்துடன் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த டெவலப்பர் தளத்தின் சில பக்கங்களில் “குக்கீகள்” அல்லது ஒரே போன்ற தொழில்நுட்பங்கள் போன்ற தரவு சேகரிப்பு சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். “குக்கீகள்” என்பது உங்கள் சாதனத்தின் ஹார்ட்-டிரைவ்/சேமிப்பகத்தில் சேமிக்கும் சிறிய கோப்புகள் ஆகும், அவை எங்கள் சேவைகளை வழங்க எங்களுக்கு உதவுகின்றன. உங்களின் தனிப்பட்ட விவரங்கள் எதுவும் குக்கீகளில் இருக்காது. குக்கீ அல்லது அது போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே கிடைக்கும் சில அம்சங்களை நாங்கள் வழங்குகிறோம். ஒரு அமர்வின் போது உங்கள் கடவுச்சொல்லை குறைவான முறையிலேயே உள்ளிட உங்களை அனுமதிக்க குக்கீகளையும் பயன்படுத்துகிறோம். உங்கள் விருப்பங்களை வழங்குவதற்கு குக்கீகள் அல்லது இது போன்ற தொழில்நுட்பங்கள் உங்களுக்கு உதவக்கூடும். பெரும்பாலான குக்கீகள் “அமர்வு குக்கீகள்” ஆகும், அதாவது அவை ஒரு அமர்வின் முடிவில் உங்கள் சாதனத்தின் ஹார்ட் டிரைவ்/சேமிப்பகத்திலிருந்து தானாகவே நீங்கிவிடும். உங்கள் உலாவி/சாதனம் அனுமதித்தால், எங்கள் குக்கீகள் அல்லது இதே போன்ற தொழில்நுட்பங்களை நீங்கள் எப்போதும் நிராகரிக்க/நீக்க சுதந்திரம் உள்ளது, இருப்பினும் அந்தச் சூழ்நிலையில் நீங்கள் தளங்களில் சில அம்சங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம், மேலும் ஒரு அமர்வின் போது உங்கள் கடவுச்சொல்லை அடிக்கடி மீண்டும் உள்ளிட வேண்டியிருக்கும். கூடுதலாக, மூன்றாம் தரப்பினரால் சேமிக்கப்படும் தளங்களின் சில பக்கங்களில் “குக்கீகள்” அல்லது பிற இதே போன்ற தொழில்நுட்பங்களை நீங்கள் பார்க்கலாம் மூன்றாம் தரப்பினரின் குக்கீகளின் பயன்பாட்டை நாங்கள் கட்டுபபடுத்துவதில்லை.
- தகவல்களைப் பகிர்தல் மற்றும் வெளிப்படுத்துதல்
உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டபடி, உரிய விடாமுயற்சியைப் பின்பற்றி, இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்கு ஏற்ப பகிரப்படுகின்றன.
வணிக பார்ட்னர்கள், சேவை வழங்குநர்கள், துணை நிறுவனங்கள், அசோசியட்கள், இணை நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள், உள் குழுக்கள் போன்ற பல்வேறு வகை பெறுநர்களுடன் உங்கள் பரிவர்த்தனையின் போது உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
தனிப்பட்ட தகவல்கள் பின்வரும் நோக்கங்களுக்காக, தெரிந்துகொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில், பொருந்தும் வகையில் பகிரப்படும்:
a. நீங்கள் பெறும் செயலிகள்/சேவைகளை வழங்குவதற்கும், உங்களுக்கும் சேவை வழங்குநர்/டெவலப்பருக்கும் இடையிலான சேவைகளை எளிதாக்குவத ற்கும், கோரியவாறு
b. தகவல் தொடர்பு, சந்தைப்படுத்தல், தரவு மற்றும் தகவல் சேமிப்பு, பரிமாற்றம், பாதுகாப்பு, பகுப்பாய்வு, மோசடி கண்டறிதல், அபாய மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான சேவைகளுக்காக
c. எங்கள் விதிமுறைகள் அல்லது தனியுரிமைக் கொள்கையை அமல்படுத்துதல்; ஒரு விளம்பரம், இடுகை அல்லது பிற உள்ளடக்கம் மூன்றாம் தரப்பினரின் உரிமைகளை மீறுகிறது என்ற கூற்றுகளுக்கு பதிலளித்தல்; அல்லது எங்கள் பயனர்கள் அல்லது பொது மக்களின் உரிமைகள், சொத்து அல்லது தனிப்பட்ட பாதுகாப்பைப் பாதுகாத்தல் போன்றவைக்காக
d. சட்டத்தின் மூலமாகவோ அல்லது நல்லெண்ணத்திலோ அவ்வாறு செய்ய வேண்டியிருந்தால், அழைப்பாணைகள், நீதிமன்ற உத்தரவுகள் அல்லது பிற சட்ட செயல்முறைகளுக்கு பதிலளிக்க அத்தகைய வெளிப்படுத்தல்கள் நியாயமான முறையில் அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.
e. அரசாங்க முன்முயற்சிகள் மற்றும் நலத்திட்டங்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் கோரப்பட்டால்
f. குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும்
g. இந்திய அதிகார வரம்பிற்குள் அல்லது வெளியே அமைந்துள்ள விசாரணை நோக்கங்களுக்காக Indus-க்குள் உள்ள உள் புலனாய்வுத் துறை அல்லது Indus ஆல் நியமிக்கப்பட்ட முகமைகளுடன்
h. நாங்கள் (அல்லது எங்கள் சொத்துக்கள்) ஏதேனும் வணிக நிறுவனத்துடன் இணைக்க அல்லது கையகப்படுத்த திட்டமிட்டால், அல்லது எங்கள் வணிகத்தை மறுசீரமைத்தல், இணைத்தல், பிற வணிக நிறுவனங்களுடன் மறுசீரமைத்தல் போன்றவற்றுக்கு
இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களின்படி மூன்றாம் தரப்பினருடன் தகவல் பகிரப்பட்டாலும், உங்கள் தனிப்பட்ட தகவலின் செயலாக்கம் அவர்களின் கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது. பொருந்தக்கூடிய இடங்களிலும், முடிந்தவரையிலும், இந்த மூன்றாம் தரப்பினருக்கு கடுமையான அல்லது குறைந்தளவில் கடுமையான தனியுரிமைப் பாதுகாப்பு கடமைகள் விதிக்கப்படுவதை Indus உறுதி செய்கிறது. இருப்பினும், இந்த கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களின்படி அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களின்படி Indus தனிப்பட்ட தகவல்களை ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் போன்ற மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த மூன்றாம் தரப்பினரால் அல்லது அவர்களின் கொள்கைகளால் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் எந்தப் பொறுப்பையும் கடமையையும் ஏற்க மாட்டோம்.
- சேமித்தல் மற்றும் தக்கவைத்தல்
பொருந்தக்கூடிய அளவிற்கு, இந்தியாவில் தனிப்பட்ட தகவல்களை சேமித்து, பொருந்தக்கூடிய சட்டங்களின்படி அதைத் தக்க வைத்துக் கொள்கிறோம், மேலும் அது சேகரிக்கப்பட்ட நோக்கத்திற்காகத் தேவையானதை விட நீண்ட காலத்திற்கு அதைத் தக்க வைத்துக் கொள்கிறோம். இருப்பினும், மோசடி அல்லது எதிர்கால துஷ்பிரயோகத்தைத் தடுக்க அல்லது சட்டத்தால் தேவைப்பட்டால், ஏதேனும் சட்ட/ஒழுங்குமுறை நடவடிக்கைகள் நிலுவையில் இருந்தால் அல்லது அந்த விளைவுக்கான ஏதேனும் சட்ட மற்றும்/அல்லது ஒழுங்குமுறை உத்தரவு பெறப்பட்டால் அல்லது பிற சட்டபூர்வமான நோக்கங்களுக்காக உங்களுடன் தொடர்புடைய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் தக்கவைத்துக் கொள்ளலாம். ஒருவேளை தனிப்பட்ட தகவல்கள் அதன் தக்கவைப்பு காலத்தை அடைந்துவிட்டால், பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்க அது நீக்கப்பட்டுவிடும்.
- நியாயமான பாதுகாப்பு நடைமுறைகள்
பயனரின் தனிப்பட்ட தகவல் மற்றும் முக்கியமான தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க தொழில்நுட்ப மற்றும் ஃபிசிக்கல் பாதுகாப்பு நடவடிக்கைகளை Indus பயன்படுத்தியுள்ளது. எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு செயல்திறன்மிக்கதாக இருந்தாலும், எந்த பாதுகாப்பு அமைப்பும் ஊடுருவ முடியாதது அல்ல என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே, எங்கள் நியாயமான பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, பொருத்தமான தகவல் பாதுகாப்பு குறியாக்கம் அல்லது கட்டுப்பாடுகள் முறையே எங்கள் நெட்வொர்க் மற்றும் சேவையகங்களுக்குள் இயக்கத்தில் உள்ள தரவு மற்றும் தரவு ஆகிய இரண்டிற்கும் வைக்கப்படுவதை உறுதிசெய்ய கடுமையான உள் மற்றும் வெளிப்புற மதிப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்படுகிறோம். தரவுத்தளம் ஒரு ஃபயர்வாலின் பின்னால் பாதுகாக்கப்பட்ட சேவையகங்களில் சேமிக்கப்படுகிறது; சேவையகங்களுக்கான அணுகல் கடவுச்சொல் பாதுகாக்கப்படுகிறது மற்றும் கண்டிப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் உள்நுழைவு ID மற்றும் கடவுச்சொல்லின் ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பை பராமரிப்பதற்கான பொறுப்பு உங்களுக்கு உள்ளது. உங்கள் தளங்களின் உள்நுழைவு, கடவுச்சொல் மற்றும் OTP விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்கள் தனிப்பட்ட தகவலுடன் எந்தவொரு உண்மையான அல்லது சந்தேகத்திற்கிடமான சமரசத்திற்கும் எங்களை தொடர்புகொள்வது உங்கள் பொறுப்பாகும்.
- மூன்றாம் தரப்பு தயாரிப்புகள், சேவைகள் அல்லது வலைத்தளங்கள்
தளங்களில் சேவை வழங்குநர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பெறும்போது, அந்தந்த சேவை வழங்குநர்களால் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படலாம் மற்றும் அத்தகைய தனிப்பட்ட தகவல்கள் அவற்றின் தனியுரிமைக் கொள்கையால் நிர்வகிக்கப்படும். அத்தகைய சேவை வழங்குநர்களால் உங்கள் தனிப்பட்ட தகவல் எவ்வாறு கையாளப்படும் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களின் தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளை நீங்கள் குறிப்பிடலாம். எங்கள் தளங்களைப் பார்வையிடும்போது எங்கள் சேவைகளில் பிற வலைத்தளங்கள் அல்லது செயலிகளுக்கான இணைப்புகள் இருக்கலாம். அத்தகைய வலைத்தளங்கள் அல்லது செயலிகள் அந்தந்த தனியுரிமை கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகின்றன, அவை எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை ஆகும். நீங்கள் எங்கள் சேவையகங்களை விட்டு வெளியேறியதும் (உங்கள் உலாவியில் உள்ள இருப்பிட பிரிவு அல்லது உங்களுக்குக் காட்டப்படும் m-தளத்தில் உள்ள URL ஐச் சரிபார்ப்பதன் மூலம் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை அறியலாம்), இந்த வலைத்தளங்கள் அல்லது செயலிகளில் நீங்கள் வழங்கும் எந்தவொரு தனிப்பட்ட தகவலின் பயன்பாடும் நீங்கள் பார்வையிடும் செயலி/வலைத்தள ஆபரேட்டரின் தனியுரிமைக் கொள்கையால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தக் கொள்கை எங்களுடையதிலிருந்து வேறுபடலாம், மேலும் அந்த செயலிகள் அல்லது வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அந்தக் கொள்கைகளை மதிப்பாய்வு செய்ய அல்லது டொமைன் உரிமையாளரிடமிருந்து கொள்கைகளுக்கான அணுகலைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இந்த மூன்றாம் தரப்பினரால் அல்லது அவர்களின் கொள்கைகளால் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் எந்தப் பொறுப்பையும் கடமையையும் ஏற்க மாட்டோம். தளங்கள் சாட் ரூம்கள், ஃபாரம்கள், மெசேஜ் போர்ட்கள், கருத்து ஃபாரம்கள், இணையதளப் பதிவுகள்/”வலைப்பதிவுகள்”, செய்தி குழுக்கள் மற்றும்/அல்லது பிற பொது மெசேஜிங் ஃபாரம்கள் உங்களுக்கு கிடைக்கச் செய்யலாம். இந்தப் பகுதிகளில் வெளியிடப்படும் எந்தவொரு தகவலும் பொதுத் தகவலாக மாறும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்கவும்.
- உங்கள் சம்மதம்
உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒப்புதலுடன் செயல்படுத்துகிறோம். தளங்கள் அல்லது சேவைகள் மற்றும்/அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம், இந்த தனியுரிமைக் கொள்கையின்படி உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குவதற்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். மற்றவர்கள் தொடர்பான எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் நீங்கள் எங்களிடம் வெளிப்படுத்தினால், அவ்வாறு செய்ய உங்களுக்கு அதிகாரம் இருப்பதாக நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள், மேலும் இந்த தனியுரிமைக் கொள்கையின்படி தகவல்களைப் பயன்படுத்த எங்களை அனுமதிக்கிறீர்கள்.
- சாய்ஸ்/ஆப்ட்-அவுட்
ஒரு கணக்கை அமைத்த பிறகு, எங்கள் சேவைகள் அல்லது அத்தியாவசியமற்ற (விளம்பர, சந்தைப்படுத்தல் தொடர்பான) தகவல்தொடர்புகளில் ஏதேனும் ஒன்றைப் பெறுவதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பை அனை த்து பயனர்களுக்கும் நாங்கள் வழங்குகிறோம். எங்கள் அனைத்து பட்டியல்கள் மற்றும் நியூஸ்லெட்டர்களிலிருந்து உங்கள் தொடர்புத் தகவலை அகற்ற விரும்பினால் அல்லது எங்கள் எந்தவொரு சேவையையும் நிறுத்த விரும்பினால், மின்னஞ்சல்களில் உள்ள குழுவிலகு பட்டனைக் கிளிக் செய்யுங்கள் அல்லது தளங்களில் உள்ள ‘உதவி’ என்ற பிரிவு மூலம் எங்களை அணுகலாம்.
- தனிப்பட்ட தகவல்களை அணுகுதல்/திருத்தம் மற்றும் ஒப்புதல்
எங்களுக்கு ஒரு கோரிக்கையை அனுப்புவதன் மூலம் நீங்கள் பகிர்ந்து கொண்ட உங்கள் தனிப்பட்ட தகவல்களை நீங்கள் அணுகலாம் மற்றும் மதிப்பாய்வு செய்யலாம். மேலே உள்ள எந்தவொரு கோரிக்கையையும் எழுப்ப, இந்தக் கொள்கையில் உள்ள ‘எங்களை தொடர்பு கொள்ளுங்கள்’ என்ற பிரிவின் கீழ் வழங்கப்பட்ட தொடர்புத் தகவலைப் பயன்படுத்தி எங்களளைத் தொடர்புகொள்ளலாம். உங்கள் கணக்கு அல்லது தனிப்பட்ட தகவல்களை நீங்கள் நீக்க விரும்பினால், தளங்களில் உள்ள ‘உதவி’ என்ற பிரிவு மூலம் எங்களை அணுகலாம். இருப்பினும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை தக்கவைத்துக்கொள்வது பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு உட்பட்டது ஆகும். மேற்கூறிய கோரிக்கைகளுக்கு, உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், அங்கீகாரத்தை உறுதிப்படுத்தவும் Indus உங்களிடமிருந்து குறிப்பிட்ட தகவல்களைக் கோர வேண்டியிருக்கலாம். இது தவறாக மாற்றியமைக்கப்படாத அல்லது நீக்கப்படாத அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பெற உரிமை இல்லாத எந்தவொரு நபருக்கும் தனிப்பட்ட தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாகும். நீங்கள் பயன்படுத்தும் தளங்களுக்கு குறிப்பிட்ட கூடுதல் தகவல்கள் உங்களுக்குத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில், தளங்களில் எளிதில் அணுகக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இதைப் பற்றிய கூடுதல் தகவல்களைத் தேடுவதற்கு, தளங்களில் உள்ள ‘உதவி’ என்ற பிரிவின் மூலம் எங்களை அணுகலாம்.
- குழந்தைகள் தொடர்பான தகவல்கள்
18 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை நாங்கள் தெரிந்தே கோரவில்லை அல்லது சேகரிக்கவில்லை மற்றும் எங்கள் தளங்களின் பயன்பாடு இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872-இன் கீழ் சட்டப்பூர்வமாக பிணைக்கும் ஒப்பந்தத்தை உருவாக்கக்கூடிய நபர்களுக்கு மட்டுமேயானது ஆகும். நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், உங்கள் பெற்றோர், சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது எந்தவொரு பொறுப்பான வயது வந்தவரின் மேற்பார்வையின் கீழ் தளங்கள் அல்லது சேவைகளைப் பயன்படுத்த வேண்டும்.
- கொள்கைகளில் மாற்றங்கள்
தனியுரிமைக் கொள்கைக்குப் பொருந்தக்கூடிய ஒரு சட்டத்தால் கோரப்பட்டாலன்றி, உங்கள் தனியுரிமைக் கொள்கையின் சில பகுதிகளை எந்த நேரத்திலும் மாற்றவோ, திருத்தவோ, சேர்க்கவோ அல்லது அகற்றவோ எங்களுக்கு உரிமை உண்டு. எவ்வாறாயினும், மாற்றங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் நியாயமான முறையில் முயற்சி செய்யலாம், புதுப்பிப்புகள்/ மாற்றங்களுக்காக தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வது உங்கள் பொறுப்பாகும். எங்கள் சேவைகள்/தளங்களை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், மாற்றங்களை இடுகையிடுவதைத் தொடர்ந்து, நீங்கள் திருத்தங்களை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று பொருள்கொள்ளப்படும். உங்களால் ஏற்கனவே பகிரப்பட்ட தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பைக் குறைக்கும் வகையில் கொள்கைகளில் நாங்கள் ஒருபோதும் மாற்றங்களைச் செய்ய மாட்டோம்.
- எங்களை தொடர்புகொள்ளுங்கள்
உங்கள் தனிப்பட்ட தகவல் அல்லது இந்த தனியுரிமைக் கொள்கையை செயலாக்குவது தொடர்பான ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள் அல்லது புகார்கள் இருந்தால், தளங்களில் உள்ள ‘உதவி’ என்ற பிரிவின் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளலாம் நியாயமான காலக்கெடுவுக்குள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தீர்வு நேரத்தில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.