Indus | Privacy policy banner

Privacy Policy

தனியுரிமைக் கொள்கை

புதுப்பிக்கப்பட்டது [] ஆகஸ்ட், 2025

இந்தக் கொள்கை Indus Appstore பிரைவேட் லிமிடெட் (முன்னர் ‘OSLabs டெக்னலாஜி (இந்தியா) பிரைவேட் லிமிடெட் என அழைக்கப்பட்டது, இது நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ் இணைக்கப்பட்டது, அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் #51/117, நெல்சன் டவர்ஸ், நெல்சன் மாணிக்கம் சாலை, அமிஞ்சிக்கரை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா 600029 என்ற முகவரியில் உள்ளது. இந்தக் கொள்கை, Indus மற்றும் அதன் துணை நிறுவனங்கள்/நிறுவனங்கள்/சப்சிடியரிக்கள்/அசோசியேட்கள் (கூட்டாக “Indus / “நாங்கள்”/ “எங்கள்” / “எங்களது” என தேவைக்கேட்ப அழைக்கப்படும்) உங்கள் தனிப்பட்ட தகவல்களை https://www.indusappstore.com/ (“Indus வலைத்தளம்”), Indus Appstore – டெவலப்பர் தளம் (“டெவலப்பர் தளம்”), Indus Appstore மொபைல் செயலி மற்றும் பிற தொடர்புடைய சேவைகள் (கூட்டாக “தளங்கள்” என்று குறிப்பிடப்படுகிறது) மூலம் எவ்வாறு சேகரிக்கின்றன, சேமிக்கின்றன, பயன்படுத்துகின்றன மற்றும் வேறுவிதமாக செயலாக்குகின்றன என்பதை விவரிக்கிறது. தளங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், Indus வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும், வேறு எந்த தளங்களிலும் எங்கள் உள்ளடக்கத்துடன் தொடர்புகொள்வதன் மூலமும், உங்கள் தகவல்களை வழங்குவதன் மூலமும் அல்லது எங்கள் தயாரிப்பு/சேவைகளைப் பெறுவதன் மூலமும், இந்த தனியுரிமைக் கொள்கை (“கொள்கை”) மற்றும் பொருந்தக்கூடிய சேவை/தயாரிப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதை நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம் மேலும் உங்கள் தனியுரிமையையும் மதிக்கிறோம் எனவே பாதுகாப்பான பரிவர்த்தனைகள் மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த தரங்களைப் பராமரிக்கிறோம். இந்த தனியுரிமைக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்தியாவின் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் இணங்கி விளக்கப்பட வேண்டும். குறிப்பாக, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் கீழ் உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப (நியாயமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் மற்றும் முக்கியமான தனிப்பட்ட தரவு அல்லது தகவல்) விதிகள், 2011 ஆகியவை, தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல், பயன்படுத்தல், சேமித்தல், பரிமாறல் மற்றும் வெளியிடல் ஆகியவற்றுக்கான தனியுரிமைக் கொள்கையை வெளியிட வேண்டுமெனக் கோருகின்றன. தனிப்பட்ட தகவல் என்பது, குறிப்பிட்ட நபருடன் தொடர்புபடுத்தக்கூடிய அனைத்து தகவல்களையும் குறிக்கிறது. இதில் முக்கியமான தனிப்பட்ட தகவலும் (அதன் முக்கியத்துவமும் தனிப்பட்டதுமான தன்மையால் அதிகப்படியான தரவு பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படும் அனைத்து தனிப்பட்ட தகவல்கள்) அடங்கும். இவை இரண்டும் இணைந்து, இங்கு பின்னர் “தனிப்பட்ட தகவல்” என குறிப்பிடப்படும். எனினும், பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய அல்லது பொதுவாக அணுகக்கூடிய எந்தத் தகவலும் இதில் சேராது. இந்த தனியுரிமைக் கொள்கையுடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், தயவுசெய்து எங்கள் தளங்களைப் பயன்படுத்தவோ அல்லது அணுகவோ வேண்டாம்.

தகவல் சேகரிப்பு

எங்கள் சேவைகள் அல்லது தளங்களை நீங்கள் பயன்படுத்தும்போது அல்லது நமது உறவின் போது எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம். நீங்கள் கோரும் சேவைகளை வழங்குவதற்கும் தளங்களை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் பொருத்தமான மற்றும் முற்றிலும் அவசியமான தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்.


சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பட்ட தகவல்களில் பின்வருவன அடங்கும், ஆனால் அவை மட்டுமல்லாமல்:

  • நீங்கள் எங்களிடம் ஒரு கணக்கை உருவாக்கும்போது உங்கள் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் வேறு ஏதேனும் விவரங்கள்
  • நீங்கள் ஏற்கனவே எங்கள் PhonePe குழுமத்தில் ஒரு கணக்கு வைத்திருந்தால், உங்கள் PhonePe சுயவிவரத்தில் இருந்து, உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெறக்கூடும். இதில், உங்கள் பெயர், மின்னஞ்சல் ஐடி, மற்றும் வழங்கப்பட்டிருக்கக்கூடிய பிற சுயவிவர விவரங்களும் ஆனால் அவை மட்டுமல்லாமல் பிற விவரங்களும் அடங்கும்.
  • உங்கள் செயல்பாட்டு தகவல்கள், உதாரணமாக உங்கள் விளம்பர ஐடி, நிறுவப்பட்ட செயலிகளின் பட்டியல், செயலி பயன்பாட்டு விவரங்கள், செயலி விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள், செயலியின் மொழி, செயலி பயன்பாட்டு புள்ளிவிவரங்கள், மேலும் எங்கள் தளங்கள் அல்லது Indus சார்பில் அல்லது அதன் பெயரில் பிற தளங்களில் வழங்கப்படும் விளம்பரங்கள் மற்றும் பிற உள்ளடக்கங்களை அணுகும் போது பெறப்படும் குறிப்பிட்ட வகையான தகவல்கள் ஆகியவை.
  • நாங்கள், மூன்றாம் தரப்பு பார்ட்னர்களிடமிருந்து, உங்களையும் உங்கள் செயல்பாடுகளையும் பற்றிய தகவல்களைப் பெறுகிறோம். இதில், அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (OEMs) உட்பட, நாங்கள் கூட்டாகச் சேவைகள் வழங்கும் போது அல்லது எங்கள் விளம்பரங்கள் அவர்களது தளத்தில் காட்டப்படும் போது கிடைக்கும் பார்ட்னர் தரப்பிலிருந்து பெறப்படும் தகவல்களும் அடங்கும்.
  • உங்கள் மொபைல் எண் மற்றும் சாதன விவரங்கள், அதாவது சாதன அடையாளங்காட்டி, சாதன மொழி, சாதனத் தகவல், இணைய அலைவரிசை, மொபைல் சாதன தயாரிப்பு மற்றும் மாடல், நிறுவப்பட்ட செயலிகளில் செலவழித்த நேரம் மற்றும் தொடர்புடைய தகவல்கள், ஐபி முகவரி மற்றும் இருப்பிடம், மைக்ரோஃபோன், இணைப்புத் தகவல் போன்றவை.

நீங்கள் ஒரு டெவலப்பராக இருந்தால், டெவலப்பர் தளத்தில் உங்கள் பதிவு மற்றும் சரிபார்ப்புக்காக உங்கள் பெயர், மின்னஞ்சல், முழு முகவரி, PAN விவரங்கள், வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிம விவரங்களை நாங்கள் கூடுதலாக சேகரிப்போம்.

தளங்களைப் பயன்படுத்துவதன் பல்வேறு கட்டங்களில் பின்வருவன போன்ற தகவல்கள் சேகரிக்கப்படலாம்:

  • தளங்களைப் பார்வையிடுதல்
  • தளங்களில் “பயனராக” பதிவு செய்தல் அல்லது தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளால் நிர்வகிக்கப்படும் வேறு எந்த உறவையும் பதிவு செய்தல், மற்றும் டெவலப்பர் தளத்தில் கணக்கைச் சரிபார்த்தல்.
  • தளங்களில் பரிவர்த்தனை செய்தல் அல்லது பரிவர்த்தனை செய்ய முயற்சித்தல்
  • இணைப்புகள், மின்னஞ்சல்கள், அரட்டை உரையாடல்கள், கருத்துக்கள், அறிவிப்புகள், தளங்களால் அனுப்பப்பட்ட அல்லது சொந்தமான விளம்பரங்களை அணுகுதல் மற்றும் அவ்வப்போது செய்யப்படும் எங்கள் கணக்கெடுப்புகளில் பங்கேற்க நீங்கள் முடிவுசெய்தால்
  • இல்லையெனில், உங்கள் PhonePe பயனர் கணக்கை உருவாக்குவது உட்பட, Indus துணை நிறுவனங்கள்/நிறுவனங்கள்/சப்சிடியரிக்கள்/அசோசியேட்கள் ஆகியவற்றுடன் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள். பெயர், மின்னஞ்சல் ஐடி, நீங்கள் வழங்கக்கூடிய பிற சுயவிவர விவரங்கள் உட்பட, ஆனால் அவை மட்டும் அல்லாமல், உங்கள் தொடர்புடைய சுயவிவரத் தகவல்கள் PhonePe செயலி முழுவதும் பொதுவானதாக இருக்கும்.
  • Indus-இல் தொழில் வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது அல்லது வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக Indus-இல் சேரும்போது

தகவலின் நோக்கம் மற்றும் பயன்பாடு

பின்வரும் நோக்கங்களுக்காக Indus உங்கள் தனிப்பட்ட தகவல்களை செயலாக்கலாம்:

  • உங்கள் கணக்கை உருவாக்குதல் மற்றும் உங்கள் அடையாளம் மற்றும் அணுகல் சலுகைகளை சரிபார்த்தல்
  • நாங்கள், துணை நிறுவனங்கள், சப்சிடியரிக்கள், அசோசியேட்கள் அல்லது வணிக பார்ட்னர்களால் வழங்கப்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை உங்களுக்கு வழங்குதல்.
  • ஆப்ஸ்டோரில் தேடல் செயல்பாட்டை இயக்குவதற்கான ஆடியோ கேள்விகளைப் பெற
  • உங்கள் கேள்விகள், பரிவர்த்தனைகள் மற்றும்/அல்லது வேறு ஏதேனும் தேவைகளுக்கு உங்களுடன் தொடர்பு கொள்ள
  • நீங்கள் எதிர்கொள்ளும் ஏதேனும் சிக்கல்களைத் தீர்க்க தகவல் தொடர்புத் தகவலை பகுப்பாய்வு செய்ய. எடுத்துக்காட்டாக, கடைசி பதிவேற்றம்/மாற்றம்/செயல் எப்போது செய்யப்பட்டது, எங்கள் சேவைகளை நீங்கள் கடைசியாக எப்போது பயன்படுத்தினீர்கள், மற்றும் பிற ஒத்த செயல்பாடுகளைச் சரிபார்க்க
  • Indus Appstore மற்றும் நீங்கள் Indus மூலமாகப் பதிவிறக்கும் பிற செயலிகளிலும் ஏற்படும் பிழைத்திருத்தங்கள், மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள், காணாமல் போன பிளக்-இன்கள் மற்றும் புதிய பதிப்புகள் (அப்டேட்கள்) தொடர்பான தகவல்களையும் தீர்வுகளையும் உங்களுக்கு வழங்குவதற்காக
  • உங்களுக்குப் பொருத்தமான புதிய செயலிகளை பரிந்துரைக்க, நீங்கள் நிறுவிய செயலிகள் போன்ற தகவல்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும்
  • உங்களுக்கு பொருத்தமான செயலிகள் மற்றும் வீடியோக்களை பரிந்துரைப்பதற்கும், பயனர் நடத்தை தொடர்பான தகவல்களை ஒருங்கிணைந்த முறையில் பகுப்பாய்வு செய்து, பல்வேறு செயல்முறைகள்/விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல்/தயாரிப்பு அல்லது சேவைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் உங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும்
  • உங்களுக்கு வழங்கப்படும் செயலிகள் மற்றும் அறிவிப்புகளை தனிப்பயனாக்குவதற்கும், ஆப்ஸ்டோரில் செயலிகளை நிர்வகித்து நீக்குவதற்கு உதவுவதற்கும், பகுப்பாய்வு சேவைகளை வழங்கி, தளங்களில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும்
  • தேவையான இடங்களில், எங்களிடம் இருக்கும் உங்களைப் பற்றிய தரவைப் பயன்படுத்தி, உங்கள் பயனர் பயணத்தை எளிமையாக்கி, சுலபமாக்குவதற்காக
  • தயாரிப்புகள்/சேவைகளை அவ்வப்போது கண்காணித்து மதிப்பாய்வு செய்வதற்கும்; உங்கள் அனுபவத்தை மேலும் பாதுகாப்பானதும் எளிதானதுமாக மாற்ற சேவைகளை தனிப்பயனாக்குவதற்கும், தணிக்கைகளை நடத்துவதற்கும்
  • நீங்கள் தளங்களில் அல்லது மூன்றாம் தரப்பு இணைப்புகள் மூலம் பயன்படுத்திய/கோரிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்காக, மூன்றாம் தரப்பினர் உங்களை தொடர்புகொள்ள அனுமதிப்பதற்காக.
  • பாதுகாப்பு மீறல்கள் மற்றும் தாக்குதல்களை கண்டறியவும்; கணக்குகள் மற்றும் செயல்பாடுகளை சரிபார்க்கவும்; சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் அல்லது எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறுதல் போன்றவற்றை விசாரித்து தடுப்பதன் மூலம் எங்கள் சேவைகளின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்தவும். மேலும், சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்கிடமான மோசடி அல்லது பணமோசடி நடவடிக்கைகள் மற்றும் பிற குற்றச் செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும். இதற்காக, உள்துறை அல்லது வெளிப்புற தணிக்கை அல்லது விசாரணையின் ஒரு பகுதியாக, இந்தியா அல்லது இந்தியாவின் சட்ட வரம்பிற்கு வெளியேயுள்ள அரசாங்க அமைப்புகள் அல்லது Indus நடத்தும் நுண்ணறிவு தணிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
  • எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அமல்படுத்தவும்; சந்தை ஆய்வு நோக்கத்திற்காக உங்களை தொடர்புகொள்ளவும்; ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சலுகைகள், தயாரிப்புகள், சேவைகள் மற்றும் புதுப்பிப்புகள் குறித்து உங்களுக்கு தகவல் வழங்கவும்; சந்தைப்படுத்தல், விளம்பரங்களை வழங்குதல், மற்றும் உங்களுக்கு பொருத்தமான தயாரிப்புகள் மற்றும் சலுகைகளை வழங்குவதன் மூலம் உங்கள் அனுபவத்தை தனிப்பயனாக்கி மேம்படுத்தவும்.
  • குக்கீகள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களை பயன்படுத்தி, உங்கள் பயனர் அனுபவத்தையும் எங்கள் சேவைகளின் மொத்த தரத்தையும் மேம்படுத்துவதற்காக.
  • கணக்கெடுப்புகள் மற்றும் ஆய்வுகளை நடத்தவும், உருவாக்கப்பட்டு கொண்டிருக்கும் அம்சங்களைச் சோதிக்கவும், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மதிப்பீடு செய்து மேம்படுத்தவும், புதிய தயாரிப்புகள் மற்றும் அம்சங்களை உருவாக்கவும், தணிக்கை மற்றும் சிக்கல் தீர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தேவையான தகவல்களை பகுப்பாய்வு செய்வதற்காகவும்.
  • உங்களுக்கு பொருத்தமான விளம்பரங்களை காட்டவும், விளம்பரங்கள் மற்றும் சேவைகளின் பயன்திறன் மற்றும் சென்றடைவு ஆகியவற்றை அளவிடவும், எங்கள் விளம்பர மற்றும் அளவீட்டு முறைகளை மேம்படுத்துவதற்காகவும்
  • எங்கள் சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை பகுப்பாய்வு செய்வதற்கும், விளம்பரங்கள் மற்றும் சேவைகளின் செயல்திறனை அளவிடுவதற்கும், வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கும், எங்கள் வணிகத்தை ஆதரிக்கும் விற்பனையாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் பிற பார்ட்னர்களுடன் விளம்பர ஐடிகள் போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்ள
  • எங்களுடனான உங்கள் தொடர்புகளின் போது வழங்கப்படும் ஆதரவு/ஆலோசனையின் தரத்தை உறுதி செய்வதற்காக எங்கள் பிரதிநிதிகள் மற்றும் முகவர்களுக்கு பயிற்சி அளிக்க.
  • தகராறுகளைத் தீர்க்க; சிக்கல்களைத் தீர்க்க; தொழில்நுட்ப ஆதரவு மற்றும் பிழைகளைச் சரிசெய்ய; பாதுகாப்பான சேவையை மேம்படுத்த உதவுதல் ஆகியவற்றிற்கு.
  • சட்ட கடமைகளை சந்திக்க

நாங்கள், பிற சட்டபூர்வமான வணிக தேவைகளுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை செயலாக்கக்கூடும். ஆனால், அது உங்கள் தனியுரிமையை அதிகமாக பாதிக்காத வகையில், செயலாக்கத்தை இயன்றவரை குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் உறுதி செய்கிறோம்.

குக்கீகள் அல்லது ஒத்த தொழில்நுட்பங்கள்

எங்கள் இணையப் பக்கங்களின் போக்குவரத்தை பகுப்பாய்வு செய்யவும், விளம்பரங்களின் பயன்திறனை அளவிடவும், எங்கள் தளத்தின் பயன்பாட்டை புரிந்துகொள்ளவும், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும், தளத்தின் குறிப்பிட்ட பக்கங்களில் “குக்கீகள்” அல்லது இதர ஒத்த தொழில்நுட்பங்கள் போன்ற தரவு சேகரிப்பு கருவிகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். “குக்கீகள்” என்பது, உங்கள் சாதனத்தின் ஹார்டு டிரைவ்/ஸ்டோரேஜில் வைக்கப்படும் சிறிய கோப்புகள் ஆகும், அவை எங்கள் சேவைகளை வழங்க உதவுகின்றன. குக்கீகளில், உங்கள் எந்த தனிப்பட்ட தகவலும் அடங்காது. எங்களின் சில அம்சங்கள் “குக்கீ” அல்லது இதர ஒத்த தொழில்நுட்பங்கள் மூலமே கிடைக்கும். ஒரே அமர்வின் போது, நீங்கள் கடவுச்சொல்லை மீண்டும் மீண்டும் உள்ளிட வேண்டாம் என்பதற்காகவும் நாங்கள் குக்கீகளை பயன்படுத்துகிறோம். குக்கீகள் அல்லது இதர ஒத்த தொழில்நுட்பங்கள், உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப தகவல்களை வழங்கவும் எங்களுக்கு உதவுகின்றன. பெரும்பாலான குக்கீகள் “அமர்வு குக்கீகள்” ஆகும், அதாவது அவை அமர்வு முடிவடைந்தவுடன் தானாகவே உங்கள் சாதனத்தின் ஹார்டு டிரைவ்/ஸ்டோரேஜிலிருந்து அவை நீக்கப்படுகின்றன. உங்கள் பிரவுசர்/சாதனம் அனுமதித்தால், எங்களது குக்கீகள் அல்லது இதர ஒத்த தொழில்நுட்பங்களை மறுப்பதற்கும்/நீக்குவதற்கும் உங்களுக்கு எப்போதும் சுதந்திரம் இருக்கும். ஆனால், அப்படி செய்தால், தளத்தில் உள்ள சில அம்சங்களை நீங்கள் பயன்படுத்த முடியாமல் போகலாம், மேலும் ஒரே அமர்வின் போது உங்கள் கடவுச்சொல்லை அடிக்கடி மீண்டும் உள்ளிட வேண்டி வரலாம். மேலும், தளத்தின் சில பக்கங்களில், மூன்றாம் தரப்பினரால் வைக்கப்படும் “குக்கீகள்” அல்லது இதர ஒத்த தொழில்நுட்பங்களை நீங்கள் சந்திக்கலாம். மூன்றாம் தரப்பினரின் குக்கீகளின் பயன்பாடு எங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. 

தகவல் பகிர்வு மற்றும் வெளிப்படுத்தல்கள்

இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்கு இணங்க, உரிய சரிபார்ப்புடன் செயல்பட்ட பிறகு, பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டபடி உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுகின்றன.

உங்கள் பரிவர்த்தனையின் போது உங்கள் தனிப்பட்ட தகவல்களை வணிக பார்ட்னர்கள், சேவை வழங்குநர்கள், துணை நிறுவனங்கள், அசோசியேட்கள், சப்சிடியரிக்கள், ஒழுங்குமுறை அமைப்புகள், உள் குழுக்கள் போன்ற பல்வேறு வகை பெறுநர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

பின்வரும் நோக்கங்களுக்காக, தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையில், பொருந்தக்கூடிய வகையில், தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படும்:

  • தேவையானபட்சத்தில், PhonePe வழங்கல்களுக்கு பொதுவான உள்நுழைவு ஒன்றை உருவாக்குதல்
  • நீங்கள் பயன்படுத்தும் செயலிகள்/சேவைகளை வழங்குவதற்கும், மேலும் உங்கள் கோரிக்கையின்படி, உங்களுக்கும் சேவை வழங்குநர்/டெவலப்பருக்கும் இடையிலான சேவைகளை எளிதாக்குவதற்கும்
  • தகவல் தொடர்பு, சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம், தரவு மற்றும் தகவல் சேமிப்பு, பரிமாற்றம், பாதுகாப்பு, பகுப்பாய்வு, மோசடி கண்டறிதல், அபாய மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான சேவைகளுக்காக
  • உங்கள் சாதனத்தில் எங்கள் சேவைகளை தனிப்பயனாக்கவும் மேம்படுத்தவும்
  • Indus Appstore மற்றும் அதில் கிடைக்கும் பிற செயலிகளுக்கான மென்பொருள் அப்டேட்களை வழங்குவதற்காக
  • எங்களின் விதிமுறைகள் அல்லது தனியுரிமைக் கொள்கையை அமல்படுத்துதல்; ஒரு விளம்பரம், பதிவு அல்லது பிற உள்ளடக்கம் மூன்றாம் தரப்பினரின் உரிமைகளை மீறுகிறது என்பது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தல்; அல்லது எங்கள் பயனர்கள் அல்லது பொதுமக்களின் உரிமைகள், சொத்து மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பை பாதுகாத்தல்.
  • சட்டத்தின்படி அல்லது நல்லெண்ணத்தின்படி அவ்வாறு செய்ய வேண்டியிருந்தால், சம்மன்கள், நீதிமன்ற உத்தரவுகள் அல்லது பிற சட்ட செயல்முறைகளுக்கு பதிலளிக்க அத்தகைய வெளிப்படுத்தல் நியாயமான முறையில் அவசியம் என்று நாங்கள் நம்பினால்
  • அரசாங்க அதிகாரிகள் அரசாங்க முயற்சிகள் மற்றும் சலுகைகளுக்காகக் கோரினால்
  • குறைகளைத் தீர்த்தல் மற்றும் தகராறுகளைத் தீர்ப்பதற்காக
  • இந்திய அதிகார வரம்பிற்குள் அல்லது வெளியே அமைந்துள்ள விசாரணை நோக்கங்களுக்காக Indus-க்குள் உள்ள உள் புலனாய்வுத் துறை அல்லது Indus-ஆல் நியமிக்கப்பட்ட ஏஜென்சிக்களுடன் பகிர்தல்
  • நாங்கள் (அல்லது எங்கள் சொத்துக்கள்) ஏதேனும் வணிக நிறுவனத்துடன் இணைக்க அல்லது கையகப்படுத்த திட்டமிட்டால், அல்லது எங்கள் வணிகத்தை மறுசீரமைத்தல், இணைத்தல், மறுசீரமைத்தல் போன்றவை நடக்கும் பட்சத்தில் அத்தகைய பிற வணிக நிறுவனங்களுடன் பகிர்தல்

இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களின் அடிப்படையில் தகவல் மூன்றாம் தரப்புகளுடன் பகிரப்பட்டாலும், உங்கள் தனிப்பட்ட தகவலின் செயலாக்கம் அவர்களின் கொள்கைகளால் நிர்வகிக்கப்படும். தேவையான இடங்களில் மற்றும் சாத்தியமான அளவிற்கு, இந்த மூன்றாம் தரப்புகள் மீது கடுமையான அல்லது அதிகபட்ச தனியுரிமை பாதுகாப்பு பொறுப்புகளை விதிப்பதை Indus உறுதி செய்கிறது. இருப்பினும், இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்காகவோ அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களின் படியோ, Indus ஆனது ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் போன்ற மூன்றாம் தரப்புகளுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிரலாம். இம்மூன்றாம் தரப்புகள் அல்லது அவர்களின் கொள்கைகள் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல் பயன்படுத்தப்படும் விதத்திற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம் அல்லது எங்கள் சார்பில் எவ்வித பொறுப்பும் ஏற்கப்படாது.

சேமிப்பு மற்றும் தக்க வைத்திருத்தல்

சாத்தியமான அளவிற்கு, நாங்கள் தனிப்பட்ட தகவல்களை இந்தியாவிற்குள் சேமித்து, பொருந்தக்கூடிய சட்டங்களின் படி மற்றும் சேகரிக்கப்பட்ட நோக்கத்திற்கு தேவையான காலத்தைத் தாண்டாமல் தக்க வைத்திருப்போம். இருப்பினும், மோசடி அல்லது எதிர்கால தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்காக அவசியமாக இருக்கலாம் என்று நாங்கள் நம்பினாலோ, அல்லது சட்டப்படி தேவையான சூழ்நிலைகளில், உதாரணமாக, எந்தவொரு சட்ட / ஒழுங்குமுறை செயல்முறை நிலுவையில் இருந்தாலோ, அதற்கான சட்ட மற்றும் / அல்லது ஒழுங்குமுறை அறிவுறுத்தல்கள் வந்தாலோ, அல்லது பிற நியாயமான நோக்கங்களுக்காகவோ உங்களுடன் தொடர்புடைய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் தக்க வைத்திருக்கலாம். தனிப்பட்ட தகவலின் சேமிப்பு காலம் நிறைவடைந்ததும், அது பொருந்தக்கூடிய சட்டங்களின் படி நீக்கப்படும்.

நியாயமான பாதுகாப்பு நடைமுறைகள்

Indus, பயனர்களின் தனிப்பட்ட தகவல் மற்றும் முக்கியமான தனிப்பட்ட தகவலைக் காக்க தொழில்நுட்ப மற்றும் நேரடியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமைத்துள்ளது. எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு வலுவானதாக இருந்தாலும், எந்த பாதுகாப்பு முறைமையும் முற்றிலும் ஊடுருவ முடியாதது அல்ல என்பதை நாங்கள் உணர்கிறோம். எனவே, நியாயமான பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, தரவு இயக்கத்தில் இருக்கும்போதும் சேமிப்பில் இருக்கும்போதும், தேவையான குறியாக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் உறுதியாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய, Indus கடுமையான உள்துறை மற்றும் வெளிப்புற ஆய்வுகளை மேற்கொள்கிறது. டேட்டாபேஸ் ஃபயர்வால் பாதுகாப்பின் பின்னால் உள்ள சர்வர்களில் சேமிக்கப்பட்டுள்ளது; அவற்றிற்கான அணுகல் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டதும், கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டதுமாகவும் இருக்கும். மேலும், உங்களுடைய லாகின் ஐடி மற்றும் கடவுச்சொல்லின் ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பை பேணுவது உங்களுடைய பொறுப்பாகும். உங்கள் பிளாட்ஃபார்ம் லாகின் விவரங்கள், கடவுச்சொல் அல்லது OTP விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்கள் தனிப்பட்ட தகவலுக்கு எந்தவொரு பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது அப்படி ஏற்பட்டிருப்பதாக நீங்கள் சந்தேகித்தாலோ, அதனை எங்களுக்கு அறிவிப்பது உங்களுடைய பொறுப்பாகும்.

மூன்றாம் தரப்பு தயாரிப்புகள், சேவைகள் அல்லது வலைத்தளங்கள்

தளங்களில் சேவை வழங்குநர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் போது, தனிப்பட்ட தகவல்கள் அந்தந்த சேவை வழங்குநர்களால் சேகரிக்கப்படலாம், மேலும் அவ்வாறான தகவல்கள் அவர்களின் தனியுரிமைக் கொள்கையின்படி நிர்வகிக்கப்படும். எனவே, உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அவர்கள் மூலம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை புரிந்துகொள்ள, அவர்களின் தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளைக் காணலாம். எங்கள் தளங்களைப் பயன்படுத்தும் போது, எங்கள் சேவைகள் பிற இணையதளங்கள் அல்லது செயலிகளுக்கான இணைப்புகளை கொண்டிருக்கலாம். அவ்வாறான இணையதளங்கள் அல்லது செயலிகள் அவர்களின் தனித்தனியான தனியுரிமைக் கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகின்றன, மேலும் அவை எங்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. நீங்கள் எங்கள் சேவையகத்திலிருந்து வெளியேறிய பிறகு (உங்கள் பிரவுசரின் லொகேஷன் பாரையோ அல்லது நீங்கள் திருப்பிவிடப்படும் m-site இல் உள்ள URL-ஐப் பார்த்து நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்), அங்கு நீங்கள் வழங்கும் எந்த தனிப்பட்ட தகவல்களும், நீங்கள் பார்வையிடும் அந்த இணையதளம்/செயலி ஆபரேட்டரின் தனியுரிமைக் கொள்கையின் கீழ் நிர்வகிக்கப்படும். அந்த தனியுரிமைக் கொள்கைகள் எங்களுடைய கொள்கையிலிருந்து மாறுபட்டிருக்கக்கூடும். எனவே, அவ்வாறான செயலிகள் அல்லது இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு முன், அந்தந்த டொமைன் உரிமையாளரிடம் இருந்து கொள்கைகளைப் பரிசீலிக்குமாறு அல்லது கொள்கைகளை பரிசீலிப்பதற்கு அணுகல் கோரிக்கையை எழுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய மூன்றாம் தரப்பினரின் கொள்கைகள் அல்லது அவர்கள் உங்கள் தனிப்பட்ட தகவலை பயன்படுத்தும் விதத்திற்கு, எங்களால் எந்தவித பொறுப்போ அல்லது கடமையோ ஏற்கப்படமாட்டாது. தளங்கள் உங்களுக்காக அரட்டை அறைகள், கருத்துக்களம், செய்தி பலகைகள், கருத்துப் படிவங்கள், வெப் பிளாகுகள் / “பிளாகுகள்”, செய்திக் குழுக்கள் மற்றும் / அல்லது பிற பொது செய்திப் பகிர்வு தளங்களை வழங்கக்கூடும். இத்தகைய பகுதிகளில் பகிரப்படும் எந்தத் தகவலும் பொதுத் தகவலாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, உங்கள் தனிப்பட்ட தகவலை அங்கே வெளியிடாமல் இருப்பது உங்களின் பொறுப்பாகும்.

உங்கள் சம்மதம்

நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உங்கள் அனுமதியுடன் செயலாக்குகிறோம். தளங்களையும் சேவைகளையும் பயன்படுத்துவதன் மூலம், மற்றும்/அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம், நீங்கள் Indus-இன் இந்த தனியுரிமைக் கொள்கையின் படி உங்கள் தனிப்பட்ட தகவல்களை செயலாக்குவதற்கான அனுமதியைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் எங்களுக்கு மற்ற நபர்களுடன் தொடர்புடைய தனிப்பட்ட தகவல்களை வழங்கினால், அதைச் செய்ய உங்களிடம் அதிகாரம் இருப்பதாக நீங்கள் பிரதிநிதித்துவம் அளிக்கிறீர்கள் மற்றும் நாங்கள் அந்த தகவலை இந்த தனியுரிமைக் கொள்கையின் படி பயன்படுத்த அனுமதிக்கிறீர்கள். மேலும், இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்காக, நீங்கள் எந்தவொரு அங்கீகார DND பதிவுகளிலும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், எங்களை தொடர்புகொள்ளும் வழிகள் (தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் போன்றவை) மூலம் உங்களுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிப்பதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.

தேர்வு/விலகல்

கணக்கை அமைத்த பிறகு, எங்கள் சேவைகள் அல்லது அத்தியாவசியமற்ற (விளம்பர, சந்தைப்படுத்தல் தொடர்பானவை) தகவல்தொடர்புகளைப் பெறுவதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பை அனைத்து பயனர்களுக்கும் நாங்கள் வழங்குகிறோம். எங்கள் அனைத்து பட்டியல்கள் மற்றும் செய்திமடல்களிலிருந்தும் உங்கள் தொடர்புத் தகவலை நீக்க விரும்பினால் அல்லது எங்கள் சேவைகளில் ஏதேனும் ஒன்றை நிறுத்த விரும்பினால், மின்னஞ்சல்களில் உள்ள குழுவிலகு (unsubscribe) என்ற பட்டனைக் கிளிக் செய்யவும் அல்லது தளங்களில் உள்ள ‘ஆதரவு’ பிரிவு மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

எங்கள் தயாரிப்புகள்/சேவைகளுக்கான அழைப்பைப் பெற்றால், அழைப்பின் போது எங்கள் பிரதிநிதியிடம் தெரிவிப்பதன் மூலம் அத்தகைய அழைப்புகளிலிருந்து நீங்கள் விலகலாம்.

தனிப்பட்ட தகவல் அணுகல்/சரிசெய்தல்

எங்களிடம் ஒரு கோரிக்கையை எழுப்புவதன் மூலம் நீங்கள் பகிர்ந்து கொண்ட உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகலாம் மற்றும் மதிப்பாய்வு செய்யலாம். மேலே உள்ள கோரிக்கைகளில் ஏதேனும் ஒன்றை எழுப்ப, இந்தக் கொள்கையின் ‘எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்’ பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள தொடர்புத் தகவலைப் பயன்படுத்தி எங்களுக்கு எழுதலாம். உங்கள் கணக்கு அல்லது தனிப்பட்ட தகவலை நீக்க விரும்பினால், தளங்களில் உள்ள ‘ஆதரவு’ பிரிவு மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளவும். இருப்பினும், உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தக்கவைத்துக்கொள்வது பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு உட்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளுக்கு, உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் அங்கீகாரத்தை உறுதிப்படுத்தவும் Indus உங்களிடமிருந்து குறிப்பிட்ட தகவல்களைக் கோர வேண்டியிருக்கலாம். இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை ஆகும், இதன் மூலம் தனிப்பட்ட தகவல் ஆனது அதைப் பெற உரிமையற்ற நபர்களுக்கு வெளிப்படாமல் இருக்கவோ, தவறான முறையில் மாற்றப்படவோ, அல்லது நீக்கப்படவோ செய்யப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் தளங்களுக்கு தொடர்புடைய கூடுதல் தகவல் தேவைப்பட்டால், தளங்களில் எளிதில் அணுகக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அல்லது தொடர்புடைய கூடுதல் தகவலுக்காக, நீங்கள் தளங்களில் உள்ள ‘ஆதரவு’ பிரிவின் மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

குழந்தைகளின் தகவல்

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை நாங்கள் தெரிந்தே கோரவோ சேகரிக்கவோ மாட்டோம், மேலும் எங்கள் தளங்களைப் பயன்படுத்துவது இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 இன் கீழ் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட ஒப்பந்தத்தை உருவாக்கக்கூடிய நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும். நீங்கள் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தால், உங்கள் பெற்றோர், சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது எந்தவொரு பொறுப்பான பெரியவரின் மேற்பார்வையின் கீழ் தளங்கள் அல்லது சேவைகளைப் பயன்படுத்த வேண்டும்.

கொள்கையில் மாற்றங்கள்

உங்களுக்கு எந்த முன் எழுத்துப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல் எந்த நேரத்திலும் இந்த தனியுரிமைக் கொள்கையின் பகுதிகளை மாற்ற, திருத்த, சேர்க்க அல்லது நீக்க எங்கள் சொந்த விருப்பப்படி உரிமை உள்ளது. இருப்பினும், மாற்றங்களை உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் நியாயமான முறையில் முயற்சிப்போம், அப்டேட்கள்/மாற்றங்களை அறிய அவ்வப்போது தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்வது உங்கள் பொறுப்பு. மாற்றங்கள் இடுகையிடப்பட்ட பிறகு, எங்கள் சேவைகள்/தளங்களை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், நீங்கள் அந்த திருத்தங்களை ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். ஏற்கனவே நீங்கள் பகிர்ந்து கொண்ட தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பைக் குறைக்கும் வகையில் கொள்கைகளில் நாங்கள் ஒருபோதும் மாற்றங்களைச் செய்ய மாட்டோம்.

எங்களை தொடர்பு கொள்ளவும்

உங்கள் தனிப்பட்ட தகவல் அல்லது இந்த தனியுரிமைக் கொள்கையைச் செயலாக்குவது தொடர்பாக ஏதேனும் கேள்விகள், கவலைகள் அல்லது புகார்கள் இருந்தால், தளங்களில் உள்ள ‘ஆதரவு’ பிரிவின் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். நியாயமான காலக்கெடுவிற்குள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். தீர்வு கிடைக்கும் நேரத்தில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அதுகுறித்து  முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.